×

காய்ந்த மாமரங்களை அதிகாரிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி, மே 7: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், மா மரங்கள் காய்ந்து வருவதால், விவசாய இலவச மின்சார பம்புசெட்டிலிருந்து, டிராக்டரின் மூலம் தண்ணீரைக் கொண்டு சென்று மா மரங்களுக்கு ஊற்ற இலவசமாக அனுமதிக்க வேண்டும். காய்ந்த மரம் ஒன்றுக்கு ₹5 ஆயிரம் வீதம், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி, தோட்டக்கலை உதவி இயக்குனர் சரவணன் தலைமையில், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான சுந்தர்ராஜன் ஆகியோர், நேற்று காவேரிப்பட்டணம் அருகே காய்ந்து போன மாமரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராமகவுண்டர் உடனிருந்தார்.

The post காய்ந்த மாமரங்களை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்